Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th December 2021 14:00:43 Hours

இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய வெளிச்செல்லும் கிழக்கு தளபதிக்கு வாழ்த்துக்கள்

சீதாவகபுரவில் உள்ள இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் 21 வது தளபதியாக பதவியேற்கவிருக்கும் மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய செவ்வாய்க்கிழமை (14) இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி பதவியின் கடமைகளை கைவிட்டார்.

இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக வழங்கப்பட்ட பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் ஆரம்பமான மேற்படி நிகழ்வின் போது 4 வது கெமுனு ஹேவா படையணியின் சிப்பாய்களால் மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டது.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள் மற்றும் பணியாளர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்னர், வெளிச்செல்லும் தளபதி படையினருக்கு ஆற்றிய உரையின் போது ஒற்றுமையுடன் செயற்படுவதே இராணுவத்தின் பலமாகும் என்பதையும் வலியுறுத்தினார்.

மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களுக்காக அதிகாரிகளுக்கான விருந்தகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதன் பின்னர், தலைமையக வளாகத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட சார்ஜண்ட் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான உணவகத்தை திறந்து வைத்தார். பின்னர் இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக பிரிகேடியர் வழங்கல் மற்றும் நிர்வாகம் பிரிகேடியர் ஜகத் வீரகோன் அவர்களினால் வெளிச்செல்லும் கிழக்கு தளபதியின் சேவைகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலான நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி வைத்ததை தொடர்ந்து விருந்தினர் பதிவேட்டில் தளபதியவர்களால் எண்ணங்கள் பதிவிடப்பட்டது.

இறுதியாக வாகன பேரணி கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற வேளையிலும் அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.