Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd April 2024 17:54:39 Hours

இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய கெமுனு ஹேவா படையணியின் 36 வது ஆண்டு நிறைவு விழா

கெமுனு ஹேவா படையணி தனது 36வது ஆண்டு நிறைவு விழாவை கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியும் 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்.டபிள்யூ.பி. வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மத மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய 19 மார்ச் 2024 அன்று குருவிட்ட படையணி தலைமையகத்தில் கொண்டாடியது.

ஆண்டு நிறைவை முன்னிட்டு 2024 மார்ச் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் சப்ரகமுவ மகா சமன் தேவாலயம், இந்து கோவில், ஜும்மா பள்ளிவாசல் மற்றும் கிறிஸ்தவ தேவாலயம் ஆகியவற்றில் சர்வ மத நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், எல்லே போட்டியும் 18 மார்ச் 2024 அன்று நடைபெற்றது.

ஆண்டு நிறைவு நாளில், படையணியன் படைத் தளபதி பணிநிலை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் அவருக்கு பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் படையினருக்கு உரையாற்றிய படைத் தளபதி அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்துபசாரத்தில் பங்குபற்றியதுடன் அதன் போது படையினருடன் நெருக்கமாக கலந்துரையாடினார். மேலும் கெமுனு ஹேவா படையணியின் உயிர் நீத்த போர் வீரர்களின் நினைவு தூபியில் மலரஞ்சலி செலுத்தினார் அதே தினத்தில் படையணி தலைமையக பெரடைஸ் மண்டபத்தில் இடம்பெற்ற இரவு முழுவதுமான பிரித் பாராயணத்திலும் படைத் தளபதி கலந்துக் கொண்டார்.

சம்பிரதாய நிகழ்வுகளில் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.