Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th June 2020 22:10:17 Hours

இராணுவ சமிக்ஞை பிரதானி முதலாவது சமிக்ஞை படையணிக்கு விஜயம்

இலங்கை இராணுவத்தின் சமிக்ஞை பிரதானியான மேஜர் ஜெனரல் அதீப திலகரத்ன அவர்கள் தனது பதவியை பதவியேற்றதன் பின்பு முதல் விஜயத்தை முல்லைத்தீவில் அமைந்துள்ள முதலாவது சமிக்ஞை படையணிக்கு மேற்கொண்டார்.

படையணிக்கு விஜயத்தை மேற்கொண்ட சமிக்ஞை பிரதானியை முதலாவது சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரி நுழைவாயிலில் வைத்து வரவேற்று பின்னர் இராணுவத்தினரால் சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டு சமிக்ஞை பிரதானியினால் படையணி முகாம் வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொண்டு படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார்.

இச்சந்தர்ப்பத்தில் இந்த படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் எச்.ஜி.ஜே.டி பெரேரா மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Adidas footwear | balerínky