Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th September 2023 19:02:28 Hours

இராணுவ கோப்ரல் விமானப்படை முகாமைத்துவ பாடநெறியில் சிறப்பு

2022 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி முதல் 2022 டிசம்பர் 3 ஆம் திகதி வரை அம்பாறையில் உள்ள போர்ப் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்ற அதிகாரவாணையற்ற அதிகாரிகளின்' நிபுணத்துவ அபிவிருத்தி பாடநெறியில் இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் கோப்ரல் வீசி ஏக்கநாயக்க அவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

மேற்கூறிய பாடநெறியை வெற்றிகரமாக முடித்த பின்னர், மே 2, 2023 முதல் 2023 ஓகஸ்ட் 13 வரை திருகோணமலை சீனக்குடா இலங்கை விமானப்படை அறிவியல் பீடத்தில் நடைபெற்ற அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான முகாமைத்துவ பாடநெறிக்கு கோப்ரல் ஏக்கநாயக்க அவர்கள் பரிந்துரைக்கப்பட்டார். மேலும் அவர் தகுதி வரிசையில் முதல் நிலையை அடைந்து, இலங்கை இராணுவத்திற்கு பெருமை சேர்த்தார்.