Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ கூடைப்பந்து வீரர்கள் 1977 பிறகு தேசிய போட்டியில்

சுகததாச மைதானத்தில் நடந்து முடிந்த 53 வது சிரேஷ்ட தேசிய கூடைப்பந்து போட்டியில் நாடளாவிய ரீதியில் சிவில் மற்றும் இராணுவ கூடைப்பந்து அணிகளுக்கு எதிராக போட்டியிட்ட இலங்கை இராணுவத்தின் கூடைப்பந்து அணி, மெர்கன்டைல் கூடைப்பந்து அணிக்கு எதிரான இறுதி போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. நாடளாவிய ரீதியில் 10 கூடைப்பந்து அணிகள் பங்குபற்றிய இப்போட்டியானது பெப்ரவரி 14 முதல் பெப்ரவரி 20 வரை நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை (20) மேர்கன்டைல் கூடைப்பந்தாட்ட அணிக்கும் இலங்கை இராணுவ கூடைப்பந்தாட்ட அணிக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியை இலங்கை இராணுவ கூடைப்பந்தாட்டக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் ஹிரோஷா வணிகசேகரவுடன் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பலரும் கண்டுகளித்தனர்.

விளையாட்டு வீரர்களின் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு மற்றும் இலங்கை இராணுவ கூடைப்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர் திரு. எஸ்.செல்வராஜா அவர்கள் வழங்கிய முறையான பயிற்சியின் விளைவாக, 1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு இராணுவ வீரர்கள் முதன்முறையாக இந்த முக்கியத்துவம் வாய்ந்த தேசிய போட்டியின் இறுதி போட்டியில் விளையாட தகுதிபெற்றனர்.

பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் தேவையான அறிவுரைகள் மூலம் இராணுவ கூடைப்பந்தாட்ட வீரர்களுக்கு ஊக்குவிப்பு மற்றும் அனைத்து வசதிகளையும் வழங்கினார்.