Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ குத்துச் சண்டை வீரர்கள் சிறந்த பதக்கங்கள் பெறுகை

லேட்டன் 79 ஆவது குத்துச் சண்டை 2019 ஆண்டு கோப்பைகளுக்கான போட்டிகள் றோயல் மாஷ் அரங்கில் இம் மாதம் 13 – 17 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

இந்த போட்டியில் இலங்கை படைக்கலச் சிறப்பணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் சஞ்ஜீவ நுவன் அவர்கள் சிறந்த குத்துச் சண்டை வீரராக தேர்ந்தெடுக்கபட்டார். அத்துடன் இலங்கை இராணுவம் 7 தங்கப் பதக்கங்களையும், 2 வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இறுதி சுற்றுப் போட்டியானது இம் மாதம் (17) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த போட்டிகளில் 10 எடை பிரிவின் கீழ் இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் சிவில் கழகங்களைச் சேர்ந்த 148 அங்கத்தவர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது. latest Nike release | Nike Off-White