Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ குத்துச்சண்டை வீரர்கள் வெற்றி

இலங்கை இராணுவ ஆண் குத்து சண்டை அணியினருக்கான தேசிய குத்துச்சண்டை சம்பியன்ஷிப் 2019 க்கான போட்டியானது ரோயல் மாஸ் எரினா விளையாட்டரங்கில் ஜனவரி மாதம் (24) ஆம் திகதி இடம் பெற்றதில் இலங்கை இராணுவ ஆண் குத்துச்சண்டை அணியினர் வெற்றிபெற்றனர்.

இப் போட்டியானது ஜனவரி 21 -24 ஆம் திகதிகளில் வரை நாடு முழுவதிலும் உள்ள குத்துச்சண்டை கிளப்புகளின் பங்களிப்புடன் நடைபெற்றது.

இராணுவ குத்துச்சண்டை அணியினர் ஆட்டமிழகாமல் ஆடியதில் 5 தங்கம், 1 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களை பெற்றதுடன் இராணுவ குத்துச்சண்டை அணி ஆண்டின் மிக வெற்றிகரமான குத்துச்சண்டை கிளப் என்று பெயர்பெற்றுள்ளது.

அதன்படி, இராணுவ பெண் குத்துச்சண்டை வீரர்களும் 3 வெண்கல பதக்கங்களை சுவிகரித்துக்கொண்டனர்.

இப்போட்டியில், 1 ஆவது விஜயபாகு படையணியின் கோப்ரல் டபிள்யூ.ஏ.ஆர் சந்தகொலும் இந்த ஆண்டின் மிகச் சிறந்த குத்துச்சண்டை வீரர் என்ற பட்டத்தைப் பெற்றார்.

இலங்கை இராணுவ அணியினர் 2019 இல் இலங்கையில் நடந்த 3 முக்கிய போட்டிகளான தேசிய சம்பியன்ஷிப், லேட்டன் கிண்ணம், கிளிபோர்ட் கிண்ணம் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்றனர் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.Nike Sneakers | plain white nike air force ones women high top Colorways, Release Dates, Price , Gov