தியதலாவை இராணுவ கல்வியற் கல்லூரி பயிலுனர்களுக்கு வலைப்பந்து விளையாட்டு மீதான ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் பயிற்சி பட்டறை கல்வியற் கல்லூரி உடற்பயிற்சி கூடத்தில் பயிற்றுவிப்பாளர் திருமதி சஞ்சீவனி வனசிங்க பீரிஸ் அவர்களினால் பெப்ரவரி (4 – 6) வரை நடத்தப்பட்டது.
அவர்களின் கை-கண் ஒருங்கிணைப்பு, குழுப்பணி, நெகிழ்வுத்தன்மை, எதிர்வினை நேரம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய பண்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த பயிற்சி பட்டறை நடத்தப்பட்டதுடன், இந்த பட்டறையில் மகளிர் பயிலிளவல் அதிகாரிகள் பாடநெறி 89 பி மற்றும் 17 (தொ) , சிப்பாய் பயிற்றுநர்கள் மற்றும் மகளிர் அதிகாரிகள் பங்கேற்றனர். வாய்ப்புக்கள் கிடைக்கும் போது தயார் நிலையில் இருப்பதற்கான இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. Sports News | New Balance 991 Footwear