Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th December 2021 14:00:41 Hours

இராணுவ கல்வியற் கல்லூரி பயிலிளவல் அதிகாரிகள் ஆய்வறிக்கைகள் சமர்பிப்பு

தியத்தலாவ 'சீன-இலங்கை நட்புறவு' கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (18) மாலை நடைபெற்ற இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி பயிலியவல் அதிகாரிகளின் இறுதி முன்மொழிவுகளை சமர்பிப்பதற்கான நிகழ்வின் பிரதம அதிதியாக அமேதகு ஜனாதிபதியவர்கள் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்தனர். பயிலிளவல் அதிகாரிகளின் பயிற்சிக்கான ஆய்வுகளின் போது தொகுக்கப்பட்ட “ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் எழுச்சி மற்றும் தெற்காசியப் பிராந்தியத்தின் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதமும், அதன் விளைவுகளும்” என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னிலைப்படுத்தப்பட்டன.

கல்லூரியின் முழுமையான அங்கிகாரம் பெற்றவர்களாகவும் தீர்மானம் எடுப்பவர்களாகவும் தொழில் ரீதியாக ஆளுமை பெற்றவர்களாகவும் அங்கிகாரம் பெறுவதற்கு அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் குழு முன்னிலையில் ஆய்வறிக்கைகளை சமர்ப்பிப்பது வழக்கமாகும். இதன்போது அறிஞர்களால் அவர்களிடம் வினாவப்படும் கேள்விகளுக்கு பதில்களித்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் மூலம் பயிலிளவல் அதிகாரிகள் சிறந்த அனுபங்களை பெற்றுக்கொள்வர்.

அதனையடுத்து இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் சார்பில் சஞ்சிகையொன்று அதன் தளபதி பிரிகேடியர் நலிந்த நியங்கொட அவர்களினால் வெளியிட்டு வைக்கப்பட்டதோடு, அதன் முதல் பிரதி அதிமேதகு ஜனாதிபதியவர்களுக்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நிறைவம்சமாக கல்லுரியின் செயற்பாடுகள் தொடர்பிலான விளக்க காட்சி சமர்பிக்கப்பட்டதை தொடர்ந்து இராணுவ தளபதியவர்கள் கருத்துரை நிகழ்த்த அழைக்கப்பட்டார்.

அதேவேளை தியத்தலாவ இராணுவ பயிற்சி கட்டளைகள் இலங்கை இராணுவ நில நடவடிக்கை கோட்பாடு, இலங்கை இராணுவ பயிற்சி கோட்பாடு, இலங்கை இராணுவ முக்கிய மதிப்புகள், பொதுவான ஆலோசனை ஆதரவு கோட்பாடு, இலங்கை இராணுவ முக்கிய மதிப்புகள் சிங்கள பதிப்பு, அதிகாரி பயிற்றுவிப்பாளர்களுக்கான வழிகாட்டி, பயிலிளவல் அதிகாரிகளுக்கான வழிகாட்டி உள்ளிட்ட 7 பதிப்புக்களை வெளியிட்டுள்ளது. அவற்றின் முதற் பிரதிகள் அனைத்தும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் ஜனாதிபதியவர்களிடம் கையளிக்கப்பட்டன. இராணுவ பயிற்சி கட்டளையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்களினால் இந்த அம்சம்கள் மேற்படி நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன.

இதேவேளை ஞாயிற்றுக்கிழமை (19) மரியாதை அணிவகுப்பின் நிறைவில் மாலை வேளையில் இராணுவ தளபதியவர்களின் தலைமையில் அதிகாரிகளுக்கான விருந்தகத்தில் பயிலிளவல் அதிகாரிகளுடனான விருந்துபசாரம் ஒன்றும் நடைபெறும் இந்நிகழ்வில், முதல் பெண்மணி திருமதி அயோமா ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணரத்ன மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், சிறப்பு அழைப்பாளர்கள், பயிலிளவல் அதிகாரிகளின் மற்றும் நலன் விரும்பிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.