Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th October 2021 14:13:43 Hours

இராணுவ ஒத்துழைப்பினால் தேவாலய கட்டுமானங்களுக்கான சிமென்ட் வழங்கள்

மன்னாரில் உள்ள 54 வது பாதுகாப்பு தலைமையகத்தினால், ஜோசப் வெஸ் தேவாலயம் வளாகத்தைச் சுற்றி உள்ள சுவரைக் கட்டுவதற்கு தேவையான 37 சிமெண்ட் பைகள் வழங்கப்பட்டன. இதற்கான அனுசரணையானது திரு ரவி ராஜபக்ஷ அவர்களின் ஒருங்கிணைபின் மூலம் இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்வேஷினி அமைப்பினால் வழங்கப்பட்டது.

மன்னார் முருங்கன், காளிமோட்டை பகுதியில் அமைந்துள்ள தேவாலய அதிகாரிகளின் வேண்டுகோளின்படி, இக் கட்டுமானத்திற்காக 542 வது பிரிகேட் படையினரின் ஆளனி வளம், மற்றும் தொழில்நுட்ப பொறியியல் திறன்கள் வழங்கப்பட்டது.

54 வது படைப்பிரிவுத் தளபதியவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 542 வது பிரிகேட்டின் கீழ் இயங்கும் உள்ள 8 வது விஜயபாகு காலாட்படையணியின் படையினரால் இந்த கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் 54 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் யூடி விஜேசேகர, 542 வது பிரிகேட் தளபதி, 54 வது படைப் பிரிவு கேணல் ஒருங்கிணைப்பு அதிகாரி, 8 வது விஜயபாகு காலாட்படையணியின் கட்டளை அதிகாரி உள்ளிட்டோர் சிமென்ட் பைகள் வழங்கும் நிழ்வில் கலந்து கொண்டனர்