Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st January 2020 13:40:57 Hours

இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் ஒன்று கூடல் நிகழ்வு

இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியினரால் முன்னால் இராணுவ தளபதிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளை கெளரவபடுத்தும் நிமித்தம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று கூடல் நிகழ்வானது ஜனவரி மாதம் (18) ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்த திட்டத்தில், இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியும் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் மகிந்த முதலிஹே அவர்களால் அதிகாரிகள் தங்குமிடவிடுதியில் இன் இசை நிகழ்வு மற்றும் இரவு விருந்தோம்பலும் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகளான,முன்னால் இராணுவ தளபதியும் பாதுகாப்பு செயலாளருமான ஜெனரல் சாந்த கோட்டேகொட உள்ளிட்ட முன்னாள் இராணுவ தளபதியும் தற்போது இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவருமான ஜெனரல் தயா ரத்நாயக்க, முன்னாள் இலேசாயுத காலாட் படையணியின் தளபதிகள் அவர்களின் துணைவியரும் கட்டளை தளபதிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலேசாயுத காலாட் படையணி மற்றும் இராணுவத்தின் வளர்ச்சிக்கு அயராது பங்களித்த ஓய்வு பெற்ற வீரர்களுக்கு இலேசாயுத காலாட் படையணியினரால் உயர்ந்த கௌரவ மரியாதை வழங்கப்பட்டன என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

அதற்கமைய இந்த நிகழ்வில் மாலை ஒரு சிறப்பு விருந்துபசாரங்களுடன், குழு புகைப்படங்களை எடுத்து கொள்வதில் அனைவரும் கலந்துகொண்டனர். latest jordan Sneakers | Nike Shoes, Sneakers & Accessories