Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th October 2021 21:10:59 Hours

இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு கிழக்கு படையினரால் தென்னங் கன்று நடுகை

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 100 சிப்பாய்களின் பங்கேற்புடன் இராணுவத்தின் 72 வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு கந்தகாடு பண்ணையில் வௌ்ளிக்கிழமை (08) தென்னங்கன்று நடுகை திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன விஜேசூரிய அவர்களின் எண்ணக்கருவிற்கு அரமவாக இத்திட்டத்தின் கீழ் படையினரால் 2000 தென்னங் கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டன. திட்டத்தின் முதலாவது கன்று கிழக்கு தளபதியவர்களால் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இராணுவ 72 வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்ட்ட இத்திட்டமே ஒரே இடத்தில் அதிகபடியான கன்றுகள் நாட்டி வைக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாக அமைந்திருந்தது.

இந்நிகழ்வில் 23 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நளீன் கொஸ்வத்த, கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு பராமரிப்பு பிரதேச தளபதி மேஜர் ஜெனரல் மஹேஸ் அபேரத்ன, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் ஜகத் வீரகோண், சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.