19th October 2021 13:15:32 Hours
இராணுவத்தின் 72 வது ஆண்டு விழாவை முன்னிட்டு 233 வது பிரிகேட் தளபதி கேணல் வசந்த ஹேவகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அவ்பிரிகேட் படையினர் மற்றும் 6 வது கஜபா படையணியின் படையினர் இணைந்து மட்டக்களப்பு வாகரை கடற்கரை பகுதியை சுத்தம் செய்தனர். மேலும் இராணுவ தினத்தை முன்னிட்டு வாகரையில் அமைந்துள்ள 233 வது பிரிகேட் தலைமையக வளாகத்தில் 50 பலாகன்றுகளும் நாட்டப்பட்டன.