21st November 2023 21:17:01 Hours
தொடர் மழையின் காரணமாக திங்கட்கிழமை (நவம்பர் 20) மாலை வேளையில் தியத்தலாவ புகையிரத நிலையத்திற்கு அருகில் மண் சரிவு காரணமாக கொழும்பில் இருந்து பதுளை வரை செல்லும் மலையக புகையிரத பாதையில் தடை ஏற்பட்டது.
இந் நிலைமைக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ டபிள்யூ எச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் கட்டளையின் பேரில் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் அந்த இடத்தை நோக்கிச் சென்று மண் மேடுகள் பாறைகளை அகற்றி நிலைமையினை சீரமைத்தனர்.