Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th March 2020 09:10:08 Hours

இராணுவ அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் பேராதெனிய முதுமாணி பட்டதாரிகளுக்கான நிகழ்ச்சி திட்டம்

பேராதெனிய பல்கலைக்கழகத்தில் அனர்த்த முகாமைதுவ முதுமாணி பாடநெறியினை தொடரும் 13 மாணவர்களின் செயற்பாடு மற்றும் கோட்பாட்டு அறிவினை மேம்படுத்தும் முகமாக கொத்மலை, அட்டபகெயில் அமைந்துள்ள இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் இரண்டு நாள் விஷேட நிகழ்ச்சி திட்டமானது முன்னெடுக்கப்பட்டன. இந் நிகழ்ச்சி திட்டமானது பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ் மார்ச் 7-8 ஆம் கிகதிகளில் இடம்பெற்றது.

பேராதெனிய பல்கலைக்கழக முதுமாணி பட்ட விஞ்ஞான பீடத்தின் வேண்டு கோளின்பிரகாரம் இந்த நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டது.

இந் நிகழ்வானது இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிலையத்தின் கட்டளைத் தளபதி கேணல் சுசந்த அமரகோண் அவர்களினால் மேற்பார்வை செய்யப்பட்டதோடு, அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிலைய பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பிரதான மீட்பு நபர்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.

அடிப்படை மீட்பு நடவடிக்கை, மீட்பு (சிஎஸ்எஸ்ஆர்) நடவடிக்கை,தேடுதல் நடவடிக்கை, மருத்துவ செயற்பாடு (எம்எப்ஆர்),தேடுதல் மற்றும் மிட்பு நடவடிக்கை , கட்டளை பிப்பிக்கும் முறை, மீட்பு நடவடிக்கை தலைமைத்துவம் ஆகிய துறைகளை குறித்த மாணவர்கள் மத்தியில் அறிமுகம் செய்தல் மற்றும் அவர்களுக்கு அவை தொடர்பாக பயிற்சியளித்தல் போன்றன இந்த நிகழ்ச்சி திட்டத்தின் நோக்கமாகும். Adidas footwear | Nike Shoes