Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th March 2020 20:07:25 Hours

இராணுவ அனர்த்த மீட்பு நிலைய குழுவினரின் ‘லென்டிங் ஹேன்ட் -2020’ போலி பயிற்சி

இலங்கை இராணுவ அனர்த்த மீட்பு நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘லென்டிங் ஹேன்ட் -2020’ போலி பயிற்சி நடவடிக்கையானது வியாழக்கிழமை 05ஆம் திகதி 170 அதிகாரிகள் மற்றும் படையினர்களின் பங்குபற்றுதலுடன் கொத்மலை நீர்தேக்க பிரதேசத்தில் இடம்பெற்றது.

இப் போலி பயிற்சி நடவடிக்கையில் அனர்த்த மீட்பு தொடர்பான கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள்,மீட்பு பணி முகாமைத்துவ நடவடிக்கைகள்( நீர், மட்டுப்படுத்தப்பட்ட இடங்கள் , கயிறு ) ஆகியன உள்ளடக்கப்பட்டது. மற்றும் இந்நிகழ்வானது பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியின் வழிகாட்டலின் கீழ் 58 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தளபதி மற்றும் இலங்கை இராணுவ அனர்த்த மீட்பு நிலையத்தின் கட்டளைத் தளபதி ஆகியோரின் மேற்பார்வையில் இடம்பெற்றது.

அவசரகால நடவடிக்கை மையத்தில் (ஈ.ஓ.சி) பொது தேடல் மற்றும் மீட்பு பணிகள், நீர் மீட்பு பணிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட மீட்பு பணிகள் மற்றும் செயல்பாட்டு அம்சங்களை பயிற்சி செய்வதற்கும், பேரழிவுகள் ஏற்பட்டால் முகாம் முகாமைத்துவ முறையை நடத்துவதற்கான ஐ.நா. தரநிலைகள் குறித்த அறிவை வழங்குவதற்கும் இந்த பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. .

பல ஆண்டுகளாக, அனர்த்த மீட்பு, முகாமைத்துவ மற்றும் மீட்பு ஆகியன அனர்த்த மீட்பு அறிவு மற்றும் மனிதாபிமானமான உதவிகளில் இராணுவ அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிலையான மற்றும் விரிவான பயிற்சிகளில் ஒன்றாக காணப்படுகின்றது. இலங்கை இராணுவ அனர்த்த மீட்பு நிலையத்தின் கட்டளைத் தளபதியவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பார்வையிட்டார். Sports brands | Sneakers