Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th August 2023 22:45:22 Hours

இராணுவ அணி ‘பாதுகாப்பு சேவைகள் கூடைப்பந்து போட்டி – 2023’ ல் வெற்றி

பாதுகாப்பு சேவைகள் கூடைப் பந்து போட்டியின் இறுதிப் போட்டிகள் - 2023 ஓகஸ்ட் 25 பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் இடம் பெற்றது.

கூடைப்பந்தாட்டக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் டபிள்யூ எம்ஆர்டபிள்யூ டபிள்யூ எச்ஜேபி வணிகசேகர வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இலங்கை விமானப்படை ஏரோநாட்டிக்கல் பொறியியல் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் டிஎடிஆர் சேனாநாயக்க மற்றும் கொமடோர் ரொஷான் அத்துகோரள ஆகியோர் இறுதிப்போட்டியில் கலந்துகொண்டனர்.

இப் போட்டியில் இலங்கை இராணுவ அணி சம்பியன்ஷிப்பை வென்றதுடன், இலங்கை கடற்படை ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தன. இலங்கை இராணுவ கூடைப்பந்தாட்டக் குழுவினால் இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. விளையாட்டுப் பணிப்பாளர் பிரிகேடியர் அனில் பீரிஸ், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இறுதிப் போட்டிகளைக் கண்டுகளித்தனர்.