Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th November 2024 08:41:15 Hours

இராணுவம் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

பாதுகாப்பு அமைச்சு, அமெரிக்க தூதரகத்துடன் இணைந்து 2024 நவம்பர் 07 அன்று இராணுவத் தலைமையகத்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதுடன், மதிய உணவும் வழங்கியது. இந்த நிகழ்வு இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பையும், மூலோபாய பாதுகாப்பையும் புரிதலையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இக்குழுவின் வருகையானது, பல நாட்டு இராணுவ நடவடிக்கைகளில் தலைமைத்துவ கடமைகளில் சிரேஷ்ட அதிகாரிகளை தயார்படுத்தல், இந்த தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்து-பசிபிக் பிராந்தியங்களில் இலங்கையின் மூலோபாய நிலைப்பாடு குறித்து முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவத்தின் மூலோபாய நோக்கங்கள் மற்றும் செயற்பாட்டு சவால்களை எடுத்துரைத்தார். கடற்படை பதவி நிலை பிரதானி ரியர் அட்மிரல் பி.ஏ.கே.எஸ்.பீ. பனாகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகளை எதிர்த்தல் மற்றும் முக்கியமான கடல் பாதைகளைப் பாதுகாப்பது உட்பட கடல்சார் பாதுகாப்பு முன்னுரிமைகள் பற்றி விரிவாக விளக்கமளித்தார். விமானப்படை பதவி நிலை பிரதானி ஏர் வைஸ் மார்ஷல் ஆர்.எஸ். விக்கிரமரத்ன ஆர்டபிள்யூபீ இரண்டு பார்கள் ஆர்எஸ்பீ இரண்டு பார்கள் யூஎஸ்பீ அவர்கள் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவத்தில் விமானப்படையின் பங்கு தொடர்பாக கலந்துரையாடினர். தேசிய பாதுகாப்புக் கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் (ஆராய்ச்சி) கேணல் எம்.பி.பி.என். ஹேரத் ஆர்எஸ்பீ அவர்கள் இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்து-பசிபிக் பிராந்தியத்தில் இலங்கையின் பாதுகாப்பு கடமைகளின் பகுப்பாய்வுக் கண்ணோட்டத்தை வழங்கினார்.

இந்த கலந்துரையாடலின் போது கேள்வி பதில் அமர்வும், அதைத் தொடர்ந்து அமெரிக்க பிரதிநிதிகள் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையே பரஸ்பர நினைவுப் பரிமாற்றங்கள், வலுப்படுத்தப்பட்ட பாதுகாப்பு உறவுகள் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை அடையாளப்படுத்தியது. இந்நிகழ்வில் அமெரிக்க சிரேஷ்ட அதிகாரிகள், பாதுகாப்பு ஆலோசகர், அமெரிக்க தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பங்கேற்பாளர்கள், இலங்கை தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தளபதி மற்றும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.