Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th September 2023 15:56:05 Hours

இராணுவப் போர்க் கல்லூரியின் நிலை உயர்வு பெற்ற தளபதி கெளரவிப்பு

அண்மையில் நிலை உயர்வு பெற்ற புத்தல இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களை இராணுவப் போர்க் கல்லூரியின் படையினர், இராணுவப் போர்க் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை (16 செப்) மரியாதையுடன் கௌரவித்தனர்.

மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், இராணுவப் போர்க் கல்லூரியின் பிரதித்தளபதி பிரிகேடியர் பிபீஜிகே பாலசூரிய ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.

நினைவுகளைச் சேர்க்கும் வகையில், அவர் இராணுவப் போர்க் கல்லூரியில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் கேட்போர் கூடத்தின் முன் குழு படம் எடுத்துக் கொண்டார். அதன் பின் அந்த நாளின் முக்கியத்துவத்தின் அடையாளமாக வளாகத்தில் ஒரு மரக்கன்று நடுவதற்கு அவர் அழைக்கப்பட்டார்.

இராணுவப் போர்க் கல்லூரியில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு தளபதி உரையாற்றியதுடன், தனது இராணுவ வாழ்க்கையில் இந்த இடத்தை அடையவதற்கு வழிகாட்டிய அனைத்து மூத்தவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார். மேலும், இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இராணுவப் போர்க் கல்லூரியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர், சிரேஷ்ட பயிற்றுனர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன், அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துடன் அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.