05th December 2023 19:15:23 Hours
இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் நான்காவது காலாண்டு அதிகாரிகள் பயிற்சி தினத்தில் இலங்கை இராணுவத்தின் ஒழுக்கப் பணிப்பகத்தின் பணிப்பாளரும் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.சி.ஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் புதன்கிழமை (நவம்பர் 29) அன்று படையணி தலைமையக்தில் அனைத்து படையலகுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 80 அதிகாரிகள் பங்கேற்றனர்.
7 வது இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியினால் முன்னெடுக்கப்பட்ட பயிற்சி நாள் நிகழ்ச்சி திட்டமானது இளம் அதிகாரிகளுக்கான பயிற்சி அமர்வு, தனிப்பட்ட விளக்கக்காட்சிகள் மற்றும் குழு விளக்கக்காட்சிகளை உள்ளடக்கியது. தொடர்ந்து இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படைத் தளபதி தனது கருத்துக்கள், வழிகாட்டுதல்கள், சமகால சூழ்நிலைகளில் ஒரு தளபதியாக அதிகாரியாக பணியாற்றுவதற்கான மதிப்புகள் மற்றும் இராணுவ நல்வாழ்வு ஆகியவற்றை தனது உரையின் போது வெளிப்படுத்தினார்.
மாலையில் அதிகாரிகள் உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்துசாரத்தின் போது அனைத்து அதிகாரிகளும் இணைந்துகொண்டதுடன் அங்கு சிறைச்சாலை திணைக்களத்தின் மகசீன் சிறைச்சாலையின் அத்தியட்சகர் திரு ஜகத்சந்தன வீரசிங்க, கொழும்பு ‘சிறைச்சாலைத் திணைக்களத்துடன் கடமை உறவுகளைப் பேணுதல்’ என்ற தலைப்பில் பெறுமதிமிக்க விரிவுரையை நிகழ்த்தினார். இந் நிகழ்வில் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.