22nd April 2025 12:04:36 Hours
இராணுவப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமை, கிளிநொச்சி பொலிஸ் விசேட படையுடன் கிளிநொச்சி பொலிஸார் இணைந்து 2025 ஏப்ரல் 16 ஆம் திகதி மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கிளிநொச்சி புளியம்பொக்கணை தர்மபுரம் பிரதேசத்தில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான 85 கிலோகிராம் (40 பொதிகள்) கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபர், போதைப்பொருள் கொண்டு செல்வதற்காக பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்ட ஒரு லொரியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தினால் மேற்கொள்ப்பட்டு வருகின்றது.