01st January 2024 18:30:06 Hours
இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் எல்.ஜி.ஜே.என் ஆரியதிலக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அலவகும்புர மகா வித்தியாலயம் மற்றும் தம்மின்ன ஆரம்பப் பாடசாலைகளில் கல்வி கற்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 127 பிள்ளைகளுக்கு 26.12.2023 அன்று தம்மின்ன ஆரம்பப் பாடசாலையில் பாடசாலைப் பைகள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. அவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். மேலும், இந்த நிகழ்வின் போது இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் சிவில் ஊழியர்களின் பத்து பிள்ளைகளுக்கும் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.