20th September 2023 21:22:33 Hours
கொஸ்கம இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகம் மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் முயற்சியில் 'பரம வீர விபூஷணய' எனும் மிக உயரிய வீரப் பதக்கத்தைப் பெற்ற இலங்கை சிங்கப் படையணியின் மறைந்த புகழ்பெற்ற போர் வீரர், கெப்டன் எஸ்டபிள்யூஎம் சாலிய உபுல் அலதெனிய பீடபிள்யூவீ அவர்களின் நினைவு தூபிக்கு அடிகல் நாட்டும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கெப்டன் எஸ்டபிள்யூஎம் சாலிய உபுல் அலதெனிய பீடபிள்யூவீ அவர்களின் தனிச் சிறந்த துணிச்சலான செயல்களுக்காக இலங்கை இராணுவத் தொண்டர் படையணி வளாகத்தில் வியாழக்கிழமை (14) நினைவு தூபி அமைப்பதற்கான அடிகல் நாட்டப்பட்டது. 1990 ஆம் ஆண்டு ஜூன் 6 திகதி கொக்காவிலில் உள்ள முகாமில் இருந்த தனது தோழர்களின் உயிரைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தனது உயிரை பொருட்படுத்தாமல் உயிர் தியாகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கெப்டன் எஸ்டபிள்யூஎம் சாலிய உபுல் அலதெனிய பீடபிள்யூவீ அவர்கள் இலங்கை சிங்கப் படையணியில் 'பரம வீர விபூஷணய' விருதினைப் பெற்ற முதல் அதிகாரியாக உள்ளமை அழியாத வரலாறு. இலங்கை இராணுவத்தில் அவரது சிறப்பான வீரச் செயல்களுக்காக மரணத்திற்குப் பின் வழங்கப்படும் மிக உயர்ந்த இராணுவ அலங்காரம் இதுவாகும். மேலும், அவரது எண்ணிலடங்கா அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில் இலங்கையில் இராணுவ வரலாற்றில் முதல் தடவையாக மரணத்திற்குப் பின் இரண்டாம் லெப்டினன் பதவியிலிருந்து கேப்டனாக ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளில் உயர்த்தப்பட்டார்.
அன்றைய பிரதம அதிதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வருகையின் பின்னர், இத்திட்டத்திற்கு முக்கிய பங்காற்றிய இலங்கை தொண்டர் படையணியின் பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ அவர்களால் வரவேற்கப்பட்டார். பின்னர், தளபதி மஹா சங்கத்தினரின் 'செத்பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் அடிக்கல்லை நாட்டி, இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இலங்கை தொண்டர் படையணி தலைமையகத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அதிகாரிகளின் பங்கு பற்றலுடன் அடிக்கல் நாட்டும் பணி நடைபெற்றது.