22nd November 2021 10:00:04 Hours
ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற விடுகை அணிவகுப்பின் முடிவில் மதுரு ஓயாவில் உள்ள விசேட படையணி பயிற்சி பாடசாலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நகர்ப்புற தடைத்தாண்டல் பாடநெறி பயிற்சி களத்தை திறந்து வைப்பதற்குத் தளபதி அழைக்கப்பட்டார். இது விரிவான நகர்ப்புற உருவகப்படுத்துதல் பயிற்சி நோக்கங்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டது, இது பயிற்சி பெறுபவர்களுக்கு உண்மையான சூழ்நிலை அமைப்புகளை வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதம அதிதி புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தின் பெயர் பலகையை திரைநீக்கம் செய்து, வெளிப்புறப் பயிற்சி களத்தை விசேட படையணி பயிற்சி பாடசாலையிடம் கையளித்தார். புதிய மாதிரி நிலப்பரப்பு தடைகளுடன் நன்கு கட்டமைக்கப்பட்டுள்ளது, விசேட படையணி பயிற்சியாளர்கள் தங்கள் சகிப்புத்தன்மை, வலிமை, சுறுசுறுப்பு, இயக்கம், நெகிழ்வுத்தன்மை போன்றவற்றை வளர்த்துக் கொள்ளவும் இதனால் விசேட படையணி படையினர் நவீன கால சவால்கள் மற்றும் பிற சவால்களை எதிர்கொள்ள உதவும்.
பின்னர் விசேட படையணியின் சிப்பாய்களின் ஒரு குழு அதன் முதல் களப் பயிற்சியினை நடத்தியது. அத்தகைய அச்சுறுத்தல்களை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதைக் காட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அன்றைய பிரதம அதிதி விசேட படையணியின் பயிற்சி கல்லூரி வளாகத்தில் நினைவுகளை சேர்க்கும் வண்ணம் மரக்கன்று நாட்டிய பின்பு, கல்லூரியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு விசேட படையணியின் புதிதாக பயிற்றப்பட்டவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார், அங்கு வந்தவர்களுடன் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார் மற்றும் அவர்களின் நலன்கள் மற்றும்,பிரச்சினைகள் குறித்தும் விசாரித்தார்.