Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd January 2025 12:09:31 Hours

இராணுவத் தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சரை மரியாதை நிமித்தம் சந்திப்பு

புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் கேபீஎ ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களை 02 ஜனவரி 2025 அன்று சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது பிரதியமைச்சர் லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களின் புதிய நியமனத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, இலங்கை இராணுவத்தின் எதிர்கால மேம்பாடு மற்றும் பரஸ்பர நலன்கள் தொடர்பாக கலந்துரையாடினர்.

இருவருக்கிடையிலான சந்திப்பின் போது ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்களை திறம்பட எதிர்கொள்ளும் வகையில் செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

அமைதியை மேம்படுத்துவதற்கும், தேசத்தின் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் இரு தரப்பினரின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், இந்த சந்திப்பு இடம்பெற்றது.

நல்லெண்ணத்தின் அடையாளமாக, இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு இராணுவத் தளபதி விசேட நினைவுச் சின்னத்தை வழங்கினார்.