08th March 2025 12:40:08 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் தனது பயிலிளவல் கால பயிற்றுவிப்பாளர்களுடன், தனது இராணுவ வாழ்க்கையை வடிவமைப்பதில் அவர்களின் குறிப்பிடத்தக்க பங்கை நினைவு கூறும் வகையில் தனது அலுவலகத்தில் சந்திப்பை மேற்கொண்டார்.
கஜபா படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி I எம்யூபீ தர்மதாச (ஓய்வு), கஜபா படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி I எம் பத்மநாதன் (ஓய்வு), இலங்கை பீரங்கி படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி I எஸ் செனரத் பண்டார (ஓய்வு), இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி I டபிள்யூஏஆர்எஸ் அமரசிங்க (ஓய்வு), கஜபா படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி II ஏஎஸ்எல் பெர்னாண்டோ (ஓய்வு) மற்றும் பணிநிலை சார்ஜன் டிடிசீகே சில்வா (ஓய்வு) ஆகியோர் இந்த புகழ்பெற்ற பயிற்றுவிப்பாளர் குழுவில் அடங்குவர்.
1989 முதல் 1990 வரை தியதலாவையிலுள்ள இந்திய இராணுவ கல்வியற் கல்லூரியில் பாடநெறி 31 இல் இராணுவத் தளபதி தனது இராணுவப் பயிற்சியை மேற்கொண்டபோது, இந்த சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் பயிற்றுவிப்பாளர்களாகப் பணியாற்றினர்.
இந்த நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் இராணுவ வைத்திய சேவை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கே.ஜி.கே.எச் விஜேவர்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் அதே பயிற்சியின் போது இராணுவத் தளபதயின் பாடநெறி தோழர்களாக இருந்தனர்.