Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th March 2025 16:13:20 Hours

இராணுவத் தளபதி அநுராதபுரம் ‘அபிமன்சல-1’ நலவிடுதிக்கு விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அனுராதபுர மாற்றுத்திறனாளி போர் வீரர்களின் நலவிடுதி ‘அபிமன்சல-1’ க்கு 2025 மார்ச் 11 ஆம் திகதி விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த இராணுவத் தளபதியின் வாகன தொடரணிக்கு நுழைவாயிலில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், இராணுவத் தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ ஆகியோரை நலவிடுதியில் வசிக்கும் போர் வீரர் ஒருவர் அன்புடன் வரவேற்றார்.

தனது விஜயத்தின் போது, இராணுவத் தளபதி நலவிடுதியை பார்வையிட்டதோடு, நலவிடுதியிலுள்ளவர்களுடன் நேரில் கலந்துரையாடி அவர்களிடம் நலன் விசாரித்தார். பின்னர், மாற்றுத்திறனாளி போர் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, நலவிடுதியின் போர் வீரர் ஒருவர் இராணுவத் தளபதி மற்றும் அவரது பாரியார் திருமதி. சுவேந்திரினி ரொட்ரிகோ ஆகியோருக்கு கையால் செய்யப்பட்ட நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம், போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பக பணிப்பாளர், 21 வது காலாட் படைப்பிரிவு தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.