30th August 2021 16:00:35 Hours
இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையின் பிரகாரம் அதிமேதகு ஜனதிபதியினால் மேஜர் ஜெனரலாக பதவியுயர்தப்பட்ட மேஜர் ஜெனரல் ஷிராந்த திசாநாயக்க அவர்களுக்கு திங்கள்கிழமை (30) இராணுவத் தலைமையகத்தில் வைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்த பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பதவியுயர்வுக்கான தர சின்னத்தையும் அவருக்கு அணிவித்து வைத்தார்.
இலங்கை இராணுவ போர்கருவி படையணியை சேர்ந்த பெருமைக்குரிய வீரர்களில் ஒருவரான அவர் தற்போது கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதிகள் அதிகாரியாக பணியாற்றுகிறார்.
இராணுவத் தளபதி அவரிடம் உரையாடுகையில்,ஒரு பதவி உயர்வானது குறிப்பிட்ட பதவிகளில் உள்ள ஒவரின் தொடர்ச்சியான கடினமான பாத்திரங்களுக்கு ஊக்கமளிக்கும் என்றும், அனுபவ வரிசைகளில் மட்டுமல்லாமல் பெரும்பாலும் ஒருவரின் தகுதி மற்றும் குறிப்பிட்ட செயல்திறன் மீது பரிந்துரைக்கப்படுகிறார் என்று தெரிவித்தார்.
அவரது எதிர்கால வாய்ப்புகள் அவருக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அதே வேளையில், ஜெனரல் சவேந்திர சில்வா மூத்த அதிகாரியிடம் தனது புதிய தரவரிசையின் அதிகாரத்தைக் குறிக்கும் குறியீட்டு வாளை வழங்கினார். இராணுவத் தளபதியின் பாராட்டிற்கும் அவரது அன்பான கருத்துக்களுக்கும் தனது நன்றியினை அவர் தெரிவித்தார்.
மேஜர் ஜெனரல் ஷிராந்த திஸாநாயக்க மனிதாபிமான நடவடிக்கைகளின் போது யுத்த பிரதேசங்களில் சேவையாற்றயேதோடு இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் நிலையத் தளபதி இராணுவத்தில் உள்ள பல முக்கிய நியமனங்களை வகித்துள்ளார்.