Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th June 2023 07:00:00 Hours

இராணுவத்தில் நெற் பயிர் செய்கைக்கு கிருமி நாசிகள் மற்றும் களை நாசிகள் தெளிக்க ட்ரோன்கல்

மிக நவீன மற்றும் விஞ்ஞான நடைமுறைகளை கடைப்பிடித்து, இலங்கை இராணுவம் முதன்முறையாக வெள்ளிக்கிழமை (ஜூன் 02) காலை ஜயவர்தனபுர இலங்கை இராணுவ தலைமையக வளாகத்தை சுற்றியுள்ள 8.5 ஏக்கர் பரப்பளவில் இராணுவ நெற் பயிர்ச்செய்கைகளுக்கு கிருமி நாசிகள் மற்றும் களை நாசிகளை தெளிப்பதற்கு சோதனை அடிப்படையில் ஆளில்லா விமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகமும், விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூபிஎஸ்எம் அபேசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, ஆகியோரின் கருத்தின் அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், செலவைக் குறைக்கவும், அத்தகைய நடைமுறைகளின் தாக்கத்தை அதிகரிக்கவும் முயற்சிக்கவும் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஏகே ராஜபக்ஷ ஆர்எஸ்பீ, 2 வது (தொ) இலங்கை விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் கெப்டன் டபிள்யூஏஏகேவை விக்ரமசிங்க ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் ஸ்ரீ பொலா வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம், ஏரோகினி வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன்படி, ஏரோகினி வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் 3 பிரதிநிதிகள் தங்களது ட்ரோன்கள் மற்றும் உபகரணங்களுடன் வந்து, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் 2 வது (தொ) இலங்கை விவசாயம் மற்றும் கால்நடை படையணியினால் நிர்வகிக்கப்படும் நெல் வயல் பகுதியில் படையினர்களின் முன்னிலையில் கிருமி நாசிகள் மற்றும் களை நாசிகளை தெளிக்கும் நுட்பங்களை செய்து காட்டினர்.