Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th March 2023 20:35:24 Hours

இராணுவத்தின் விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் புதிய அலுவலக வளாகம்

இராணுவத்தின் விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் புதிய அலுவலகக் கட்டிடத் தொகுதியானது இன்று பிற்பகல் (14) பனாகொடை இராணுவ வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கபட்டது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுடன் இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களும் கலந்து கொண்டு புதிய வசதிகளைக் கொண்ட கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

இராணுவத்தின் விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஏகே ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்கள் புதிய அலுவலக வளாகத்திற்கு முன்பாக, பணிப்பகத்தின் அதிகாரிகளுடன் சேர்ந்து, அன்றைய சிறப்பு விருந்தினர்களை மரியாதைடன் வரவேற்று புதிய கட்டிடத்தை திறந்து வைக்க அழைத்தார்.அங்கு கூடியிருந்த மகாசங்கத்தினரின் ‘செத்பிரித்’ பாராயணங்களுக்கு மத்தியில் பதாதையை திரைநீக்கி, நாடாவை வெட்டி புதிய கட்டிடத் தொகுதியை திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து பிரதம அதிதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் புதிய அலுவலக வளாகத்தின் ஒவ்வொரு பகுதியையும் பார்வையிட்டனர். அதன் பல்வேறு நிர்வாக செயல்பாடுகள் குறித்தும் அவர்களை விசாரித்து, இராணுவ வீரர்களால் முன்னெடுக்கப்படும் விவசாயத் திட்டங்களின் செயல்பாட்டு அம்சங்கள் குறித்தும் அவர்கள் தகவல்களைப் பெற்றனர்.திறப்பு விழாவின் முடிவில், சிறப்பு விருந்தினர்கள் அன்றைய நிகழ்வின் நினைவம்சமாக குழுப்படங்கள் எடுத்துக் கொள்ளும் நிகழ்விலும் கலந்து கொண்டனர்.தேநீர் விருந்துசாரத்தின் போது விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்திற்கு வழங்கிய வழிகாட்டுதலுக்கு நன்றி பாராட்டும் முகமாக தளபதிக்கு சிறப்பு நினைவுச் சின்னம் ஒன்று வழங்கப்பட்டது.