05th September 2021 22:21:40 Hours
இராணுவத்தின் ஒழுக்கச் செயற்பாடுகளை நெறிப்படுத்தல் மற்றும் முழு நிர்வாகச் செயற்பாடுகளை கட்டமைத்தல், பணியாளர்களை வழிநடத்தல் போன்ற செயற்பாடுகளில் முழு இராணுவத்தினதும் முதுகெலும்பாகவும் முன்ணுதாரணமாகவும் செயற்படும், சிரேஸ்ட அதிகார ஆணையற்ற அதிகாரிகளுக்காக நாவுலவிலுள்ள சிறப்பு படைத் தலைமையகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரமிப்புக்குரிய மற்றும் மனதைக் கவரும் வகையிலான தங்குமிட கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை (5) திறந்து வைக்கப்பட்டது. இதன்போது மேற்படி முன்னுதாரணமாக திட்டத்திற்கும் தாராள மனப்பான்மைக்கும் விஷேட படை தளபதியான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேற்படி மிகச் சிறந்த கட்டிட நிர்மாணத்திற்கான திட்டமிடல்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பே வகுக்கப்பட்டிருந்த நிலையில் சிரேஸ்ட அதிகார ஆணையற்ற அதிகாரிகளின் தொழில்முறை தரம், சமூக வாழ்க்கை முறை, தரமதான உணவு வகைகளை பெற்றுக்கொள்ளகூடிய நவீன உணவகம் வசதிகள் என்பவற்றை பிரதிபதிலிக்கும் வகையில் மேற்படி கட்டிடம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களால் பின்பற்றப்படும் ஒழுக்கம், ஆடை ஒழுங்கமைப்புச் செயற்பாடுகள், உணவு மேசை பழக்கவழங்கங்கள் என்பன அவர்களின் கீழுள்ள தர வரிசைகளுக்கு முன்ணுதாரமான அமைந்திருப்பதோடு, விஷேட படைத் தலைமையகத்தில் காணப்பட்டும் உட்கபட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க மற்றும் மேஜர் ஜெனரல் செனரத் யாப்பா ஆகியோர் உள்ளடங்களாக விஷேட படை சிரேஸ்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் இடம்பெற்ற சபைக் கூட்டத்தில் ஆராயப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது கட்டிட வடிவமைப்புகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதோடு, அதற்கு பதிலாக, தொலைக்காட்சி பார்க்கும் பகுதி, கலியாட்ட தொகுதி மற்றும் சமையலறை கட்டமைப்பின் சுகாதார வசதிகள் என்பன உலகத்தரம் வாய்ந்த வித்தியாசமான மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்புக்களை கட்டமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டது. அதற்கமைய ஏனையவர்களால் பாராட்டப்படக்கூடிய வகையிலும் பின்பற்ற தக்க வகையிலும் மேற்படி நிர்மாண செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு இராணுவ தளபதியும் விஷேட படைத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவின் போது போது அறிவுரை வழங்கப்பட்டது. பாரம்பரிய கலைகளின் தலைசிறந்த அம்சங்களை பின்பற்றுவதால் அதன் மீதான ஒரு பற்றை உருவாக்க முடியுமெனவும் தளபதி சுட்டிக்காட்டியிருந்தார்.
இக்கட்டிடத்தின் பிரதான மண்டபத்திற்குள் காணப்படும் பகுதி விஷேட படை தலைமையகத்தின் போரில் உயிர் நீத்த படைப்பிரிவு சார்ஜன் மேஜர் நிலையினரின் புகைப்படங்களை கொண்டதாக அமைந்துள்ளது. இதனால் அவர்களின் செயற்பாடுகள் நினைவுக்கூறப்படுவதுடன் இராணுவத்திற்குள் மேற்படி போர் வீரர்கள் பிரத்தியேகமாக நினைவுகூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் படையணி நிலையத் தளபதி பிரிகேடியர் நிஸ்ஸங்க எரியகம ஆகியோரின் ஒருங்கிணைப்பின் கீழ் பொறியியல் சேவை மற்றும் விஷேட படைச் சிப்பாய்களால் கட்டிட நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டு துரிதமாக முன்னெடுக்கப்பட்டன. விஷேட படைத் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (5) திறக்கப்பட்ட புதிய உணவக கட்டிடம், 300 சிரேஸ்ட அதிகார ஆணையற்ற அதிகாரிகள் உணவுத் தேவை மற்றும் துரித உணவு வகைகளை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் அமைந்திருப்பதோடு, ஏனைய பகுதிகளிலுள்ள உணவகங்களை விடவும் முற்றிலும் மாறுப்பட்ட கட்டமைப்பை கொண்டதாக மேற்படி கட்டிடம் அமைந்துள்ளது.
விஷேட படை சிப்பாய்களின் உயர்வான தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இராணுவ நிதியில் நிர்மாணிக்கப்பட்ட தனிப்பதுவமாக தரங்களை கொண்ட உணவக வசதிகள் விஷேட படைகளுக்கு பெற்றுகொடுக்கப்பட்டுள்ளன.