Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th September 2021 16:28:19 Hours

இராணுவத்தின் புதிய பிரதி பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அலுவலக கடமைகயை பொறுப்பேற்றார்

இராணுவத்தின் புதிய பிரதி பதவி நிலை பிரதானியாக நியமனம் பெற்றுள்ள இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியின் மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட புதன்கிழமை (8) இராணுவ தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பௌத்த மத அனுட்டானங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட தளபதி பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களிலும் கையொப்பமிட்டார். மேற்படி நியமனத்தை பெற்றுக்கொள்ளும் முன்பாக மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதியாக சேவையாற்றினார். இவருக்கு முன்பாக மேற்படி நியமனத்தை வகித்த மேஜர் ஜெனரல் வசந்த மாதொல இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வில் நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர, உபகரண பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சமந்த சில்வா, வழங்கள் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரகோன், இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வணசிங்க, இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் அஜித் கொம்தந்திரி, இராணுவ தலைமையகத்தின் சில பணிப்பாளர்கள் , பதவி நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.

மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொடவின் சுயவிவரம் கீழ்வருமாறு

மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட கம்பளையில் புகழ்மிக்க விக்கிரமபாகு மத்திய கல்லூரியின் பெருமைக்குரிய மாணவராவார். அதிகாரி பயிலிவியல் பாடநெறி எஸ்எஸ்சி 11 இன் கீழ் 17 மார்ச் 1986 அன்று இராணுத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டார். அதனையடுத்து லெப்டினன் அதிகாரிகள் வரிசையில் ஐந்தாம் அதிகாரியாக தெரிவானார். பின்னர் இலங்கை பீரங்கிப் படையிணியில் இணைந்துகொள்ள விரும்பிய அவர் 21 பெப்ரவரி 1987 அன்று 06 வது இலங்கை பீரங்கி படையணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

அவரது சிறப்பான இராணுவ வாழ்க்கையில், அவர் பல கட்டளையிடும் , பதவி நிலை பதவிகளை வகித்துள்ளார். அதன்படி படை தளபதி அலுவலகம், துப்பாக்கி சுடுதல் திசைகளுக்கான அதிகாரி, முன்னரங்கு கண்காணிப்பு அதிகாரி, பேட்டரி கெப்டன் மற்றும் 6 வது 7 வது மற்றும் 10 இலங்கை பீரங்கி படையணிகளின் பேட்டரி தளபதி , 11 வது இலங்கை பீரங்கி படை மற்றும் 8 வது இடைநிலை பீரங்கி படைகளின் கட்டளை அதிகாரியாகவும் பதவி வகித்துள்ளார். மேலும் மின்னேரியாவிலுள்ள பீரங்கி பாடசாலையின் பயிற்றுவிப்பாளராக நியமனம் பெற்ற அவர், இலங்கை இராணுவ பீரங்கிப் படையின் தளபதியாகவும் நியமனம் வகித்தார்.

அவர் இராணுவ தலைமையகத்தின் நடவடிக்கை பிணப்பகத்தின் உபகரண பணிப்பாளர் நாயக அலுவலக கிளை, வெலியோயாவிலுள்ள 23 வது தலைமையகம் படைப்பிரிவு தலைமையகம் மற்றும் பகுதி தலைமையகத்தில் தரம் I மற்றும் தரம் II பொதுப் பணி பணிப்பாளர் நியமனங்களையும் நியமனங்களை வகித்துள்ளார். அத்தோடு, அவர் இராணுவ தலைமையகத்தின் உபகரண பணிப்பாளர் நாயக கிளையின் கேணலாகவும், பின்னர் காணி மற்றும் விடுதிகள் பணிப்பகத்தின் பணிப்பாளராகவும் நகர்வு (அதிகாரப்பூர்வமானது) பணிப்பக பணிப்பாளராகவும் சேவையாற்றியுள்ள மேற்படி அதிகாரி பாதுகாப்பு அமைச்சின் சிரேஸ்ட இராணுவ ஆலோசகராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட மனிதாபிமான நடவடிக்கைகளின் போது 612 மற்றும் 663 காலாட்படைப் பிரிகேட்களுக்கு கட்டளையிடும் அதிகாரியாகவும் பின்னர், அவர் 55 வது படைபிரிவு தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியாக நியமனம் வகித்த மேஜர் ஜெனரல் கொடுவேகொட தனது தற்போதைய நியமனத்திற்கு முன்னர், இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதியாக சேவையாற்றினார். தற்பொழுது அவர் இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியாகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட பல்வேறுப்பட்ட துறைகள் தொடர்பாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கற்கைநெறிகளை பூர்த்தி செய்திருப்பதோடு, (காலாட்படை பயிற்சி மையம்/ போர் பயிற்சி பள்ளி), மிட் கெரியர் பாடநெறி , படைப்பிரிவு தளபதிகளுகான பாடநெறி (மாதுரு ஓயா), இளம் அதிகாரிகளுக்கான பாடநெறி (இந்தியா), அமெரிக்க விஷேட படை பயிற்சி, மிட் கெரியர் கோர்ஸ் - பீரங்கி (பாகிஸ்தான்), அதிகாரிகளுக்கான துப்பாக்கிச்சுடுதல் பாடநெறி (பங்களாதேஷ்), கட்டளை அலகு தளபதிகளுக்கான பாடநெறி - பீரங்கி (பாகிஸ்தான்), பாதுகாப்பு ஆய்வுக் கல்லூரி பயங்கரவாதத்திற்கு எதிரான பதில் நடவடிக்கைகள் தொடர்பிலான பாடநெறி ஆசியா -பசிபிக் பாதுகாப்பு ஆய்வு மையம் (அமெரிக்கா) மற்றும் அனர்த்த முகாமைத்துவ பயிற்சி பட்டறை - பன்னாட்டு ஆசிய-பசிபிக் 2012 (ஜப்பான்) இல் ஒத்துழைப்புத் திட்டம். மேலும், அவர் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ முதுமானி பட்டம் பெற்றார். அத்தோடு பிலிப்பைன்ஸின் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் தேசிய பாதுகாப்பு நிர்வாகம் தொடர்பிலான முதுமானி பட்டத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.