Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th August 2021 08:59:11 Hours

இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி ஏற்றும் திட்டம் மத்திய மலை நாட்டிலும் ஆரம்பம்

சமூகத்தின் முதியோர், நோய்வாய்ப்பட்டவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பலவீனமான பிரிவினருக்கு தடுப்பூசி வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கும் இராணுவத்தின் நடமாடும் கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் திட்டம் மேலும் விரிவுபடுத்தி மத்திய மாகாணத்தில் இன்று (23) காலை கண்டி இராணுவ வைத்தியசாலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.

தேசிய திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்ப்பு வழங்கும் வகையில் பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிக்காட்டலில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் மேற்பார்வையில் 11 வது படைப்பிரிவு தளபதியும் கண்டி மாவட்ட கொவிட் தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்களினால் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த வீடுகளுக்கு சென்று கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்காக மூன்று நடமாடும் தடுப்பூசி வழங்கும் வாகனங்கள் மற்றும் இரண்டு ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நடமாடும் சேவை தேவைப்படுபவர்கள் அந்தந்த உதவிப் பிரதேச செயலகங்கள், கிராம சேவையாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மாவட்ட செயலகம் அல்லது பல்லேகலை 11 வது படைப்பிரிவு தலைமையகத்திற்கு தொலைப்பேசி ஊடாக பதிவு செய்வதன் மூலம் இச்சேவையினை பெற்றுக் கொள்ள முடியும். பிறகு மட்டுமே.

மேஜர் ஜெனரல் கித்சிரி லியனகே சேவையை தொடங்க தயாராக இருந்த புதிய நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை பரிசித்ததுடன் அதன் மருத்துவ ஊழியர்களுடன் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார்.

குறித்த சேவையில் பங்கெடுக்கும் வாகனங்கள் தாதியர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் தரவு பதிவு இயக்குனர்கள் என்போரைக் கொண்டதாக காணப்படும் அத்தோடு அரச நிர்வாக அதிகாரிகளின் பரிந்துரைப்படி நியமிக்கப்பட்ட பகுதிகளில் நிலை நிறுத்தப்படும். தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் அது தொடர்பாக செயல்படுவதற்கு ஒரு மருத்துவ அதிகாரியுடனான ஆம்புலன்ஸ் வண்டி தயார் நிலையில் காணப்படும்.

தேசிய தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்குமைவாக இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் மேல் மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணத்திலும் முன்னெடுக்கப்படுகின்றது.