Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th April 2021 21:05:55 Hours

இராணுவத்தின் ஏற்பாட்டில் வன்னி மாணவர்களுக்கு 1000 ஜோடி சப்பாத்துக்கள்

அம்போன் ஹோல்டிங் பி.எல்.சி இலங்கை இராணுவத்துடன் இணைந்து ஏப்ரல் 7 முதல் 8 வரை மகாவிலாச்சிய மற்றும் நொச்சியகம பிரதேச செயலகப் பகுதிகளில் உள்ள 1000 ஏழை மாணவர்களிடையே பாடசாலை காலணிகளை விநியோகித்தது.

இரண்டு நாள் திட்டத்தின் முக்கிய நிகழ்வு 2021 ஏப்ரல் 07 அன்று மஹாவிலாச்சிய மூன்றாம் ஒழுங்கை காமினி வித்யாலய வளாகத்தில் 21 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே தலைமையில் இலங்கை இராணுவ முன்னாள் பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் (ஓய்வு) சன்ன குணதிலக்க அவர்களிடமிருந்து மாணவர்கள் காலணிகளைப் பெற்றனர்.

அடுத்த நாள் (8), 8 பாடசாலைகளின் மாணவர்களுக்கு மீதமுள்ள காலணிகள் வழங்கப்பட்டன. இந்த சமூகம் சார்ந்த திட்டம் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களின் ஆலோசனையின் படி செயல்படுத்தப்பட்டது.

213 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் கே.ஏ.என். ராசிக குமாராவின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சன்ன குணதிலகாவின் ஒருங்கிணைப்புடன் அம்போன் ஹோல்டிங் பி.எல்.சி நிறுவனம் 1000 ஜோடி காலணிகளை தேவையுடைய மாணவர்களுக்கு வழங்க நிதியுதவி செய்தது.

5 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படை கட்டளை அதிகாரி மேஜர் எஸ்.டி. ரத்னசிரியின் மேற்பார்வையில் படையினர் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. அம்பியோன் ஹோல்டிங் பி.எல்.சியின் உதவி தலைவர் திரு சஜீவ நாரங்கொட மற்றும் தொடர்பாடல் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் திருமதி ஷகிலா கமலேந்திரன், காமினி வித்யாலயத்தின் அதிபர் ஆசிரியர்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் விநியோக நிகழ்வில் பங்கேற்றன. Sport media | シューズ