Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st October 2022 20:06:09 Hours

இராணுவத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் 7 கரப்பந்து அணிகள் போட்டியில் கலந்து கொள்கின்றன

யாழ் குடாநாட்டில் பொது மக்கள் மற்றும் இராணுவத்தினருக்கிடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் 55 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 552 வது பிரிகேடின் 1 வது இயந்திரவியல் காலாட் படையணி படையினர், ஏழு கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளின் விளையாட்டு வீரர்களுடன் கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு இடையிலான கரப்பந்து போட்டியை (ஒக்டோபர் 15 தொடக்கம்16 வரை) ஏற்பாடு செய்தனர்.

552 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜயநாத் ஜயவீர அவர்கள் இரண்டு நாட்களும் அய்யக்கச்சியில் உள்ள 1 வது இயந்திரவியல் காலாட் படையணி முகாமில் உள்ள கரப்பந்து மைதானத்தில் போட்டிகளை நடாத்தினார். இப்போட்டியில் 7 கிராம சேவை பிரிவுகளைச் சேர்ந்த சிவில் துறை கரப்பந்து அணிகள் பங்கேற்று தங்களது திறமைகளையும் செயல்திறனையும் வெளிப்படுத்தின.

இறுதிப் போட்டிக்கு கோவில்வயல் கிராம சேவை பிரிவு அணியும் அய்யக்கச்சி கிராம சேவை பிரிவு அணியும் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டன. இருப்பினும், கோவில்வயல் கிராம சேவை பிரிவு அணியில் இருந்த வீரர்கள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். இப் போட்டியில் அய்யக்கச்சி கிராம சேவை பிரிவு அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக 1 வது இயந்திரவியல் காலாட் படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ரோஹன திலகரத்ன அவர்கள் கலந்து கொண்டார். பரிசளிப்பு விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.