Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st December 2021 11:14:04 Hours

இராணுவத்தினால் முல்லேரியா வரிய குடும்பத்திற்கான புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவின் வழிகாட்டலில் 144 வது பிரிகேடின் தளபதி கேணல் விந்தன கொடிதுவாக்கு அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் 12 வது கஜபா படையணி மற்றும் 2 வது (தொ) இலேசாயுத காலாட்படையின் சிப்பாய்கள் இணைந்து மக்கள் வங்கியின் பௌத்த சங்கத்தின் நிதி அனுசரணையுடன், கலாநிதி மாதவ தேனுவர மற்றும் சில நன்கொடையாளர்களின் அணுசரனையுடனும் வடக்கு முல்லேரியாவ கிராம சேவையாளர் பிரிவு பிரதேசத்தில் நான்கு பிள்ளைகளை கொண்ட திரு வெல்கமகே சுதர்சன பிரபாத் என்ற வரிய குடும்பத்திற்கு புதிய வீடொன்றை நிர்மாணித்து செவ்வாய்க்கிழமை (28) பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் பசுமை விவசாய நடவடிக்கை மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் 2020 – 2025 க்கான முன்னோக்கிய மூலோபாய திட்டத்திற்கு அமைவாக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் 14 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கிருஷாந்த ஞானரத்ன மற்றும் 144 வது பிரிகேட் தளபதி கேணல் விந்தன கொடிதுவாக்கு ஆகியோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பண்டைய மரபுகளுக்கு இணங்க, அன்றைய தினம் பிரதம அதிதியும் அனுசரணையாளர்களும் பெயர் பதாகை திரைநீக்கம் செய்து புதிய வீட்டை சுப வேளையில் சமய வழிபாடுகளுக்கு மத்தியில், விளக்கேற்றி, பால் பொங்கும் சடங்குகளுடன் இணைந்து, வீட்டுச் சாவியுடன் பத்திரத்தையும் கையளித்தனர். அதே நேரத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் “சிசு உதான” வங்கி கணக்கு புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட்டன.

144 வது பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி, 12 வது கஜபா படையணி மற்றும் 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி ஆகியவற்றின் கட்டளை அதிகாரிகள், மக்கள் வங்கி தலைவர் திரு சுஜீவ ராஜபக்ஷ, மக்கள் வங்கியின் கொட்டிகாவத்தை கிளை முகாமையாளர் திரு ஜயசூரிய மற்றும் அவர் பாரியார் மற்றும் அனைத்து நிதி ஆதரவாளர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.