Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th March 2024 18:35:30 Hours

இராணுவத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இலுக்பிட்டிய கனிஷ்ட வித்தியாலத்தின் இரண்டு மாடி கட்டிட திறப்பு விழா

கொட்டபொல இலுக்பிட்டிய கனிஷ்ட வித்தியாலயத்தின் மாணவர்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துக் கொள்ள வருகை தந்த தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான திரு. சாகல ரத்நாயக்க அவர்களை 25 மார்ச் 2024 அன்று வரவேற்றனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே. ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் நன்கொடையாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வருகை தந்தவர்களை பாடசாலையின் பிள்ளைகள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து பிரதம அதிதி சிறப்புப் பதாகையை திரைநீக்கம் செய்ததுடன் நாடா வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர், பாடசாலை மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் அன்றைய நிகழ்வை வண்ணமயமாக்கியதுடன், கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 1981 ஆம் ஆண்டு குழுவின் சிரேஷ்ட உறுப்பினரான திரு. சாகல ரத்நாயக்க மற்றும் திரு. அமந்தா வீரசிங்க ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இறுதியில், பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி ஏ.பி. வலிசதீர அவர்கள் நன்கொடையாளர்கள் மற்றும் அழைப்பாளர்களுக்கு பாடசாலையின் சார்பாக நன்றியைத் தெரிவித்தார்.

திரு. அமந்தா வீரசிங்க அவர்களின் ஒருங்கிணைப்பில் கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 1981 குழுவின் நிதி நன்கொடையுடன், கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் 16 ஜூன் 2023 அன்று ஆரம்பிக்கப்பட்டன.

இலுக்பிட்டிய கனிஷ்ட வித்தியாலய அதிபர் திரு. ஏ.ஜி.என்.சி.லக்மால் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இராணுவத் தளபதியின் கட்டளைக்கு அமைய இராணுவ பொறியியல் சேவைகள் படையணியின் படையினர் இத்திட்டத்தை முன்னெடுத்தனர்.