Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவத்தினர் பில்லியட் மற்றும் ஸ்னூகர் போட்டிகளில் வெற்றி

2020-பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு பில்யிட் மற்றும் ஸ்னூகர் சம்பியன்ஷிப் போட்டிகளில் இராணுவ பில்யிட் மற்றும் ஸ்னூகர் அணியினர் இரண்டாம் முறையாகவும் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர். மேலும் இப் போட்டிகள் பனாகொடையில் உள்ள பொறியியலாளர் சேவைப் படைத் தலைமையக பில்லியட் மற்றும் ஸ்னூகர் அரங்கில், பெப்ரவரி 24 முதல் 26ஆம் திகதிகளில் நடை பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக வரவு செலவு திட்ட மற்றும்; நிதி பணிப்பகத்தின் பணிப்பாளரான கடற் படை அதிகாரி ரியர் அட்மிரால் எம் எம் வி பீ மெத்தகொட அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும் இலங்கை இராணுவ பில்யிட் மற்றும் ஸ்னூகர் குழுவினர் 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப் போட்டியாளர்கள் பில்லியட், ஸ்னூகர், சிக்ஸ் ரெட் ஸ்னூகர், பொட் பிலக் ஸ்னூகர் மற்றும் டபிள் போன்ற போட்டிகளில் போட்டியிட்டனர். மேலும் இவ் இராணுவப் போட்டியாளர்கள் விமானப் படை குழுவினருடன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

இப் போட்டியில் இராணுவ அணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஈ டி என் சொய்சா, பீ. எம் உபாலி, எஸ். ஜி சுசன்த விக்ரம, எம்.ஜி.ஜி.ஐ அமரதுங்க, டி.டீ மதுரங்க, எஸ். எஸ் தினுருவன், எம்.எம் முதீன், டீ.எம்.ஜெ.கே தசநாயக்க, கே.ஜி.கே அனுருத்த, டபிள்யூ.டீ.மதுசங்க, சி.எம்.ஜி சந்திரசேகர, எம்.எஸ்எம்.என் பெணான்டோ மற்றும் ஆர். எம்.ஜி ரத்நாயக்க போன்றோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் இலங்கை இராணுவ ஸ்னூகர் சங்கத் தலைவரான பிரிகேடியர் ஐ.எச். எம்.என் ஹேரத், விளையாட்டு பணிப்பக பணிப்பாளரான பிரிகேடியர் பி.எம்.எல் சந்திரசிறி, பொறியியலாளர் சேவைப் படையணியின் பிரதி தளபதியான கேர்ணல் எஸ்.டீ.பி.சி ஆர்சிகே, பொறியியலாளர் சேவைப் படையணியின் மத்திய தளபதியான கேர்ணல் கே.எம்.எஸ் குமார மற்றும் பல உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். Adidas footwear | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals