Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவத்தினர் ஒருங்கிணைப்பில் கல்கடவல குடும்பத்தினருக்கு வீடு வழங்கி வைப்பு

அநுராதபுரம் கல்கடவல பகுதியில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தின் கஷ்ட நிலையை அறிந்த வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம் வரையரையறுக்கப்பட்ட சைன்டர் டெக்னாலஜிஸ் தனியார் நிறுவனத்தின் அனுசரனையுடன் புதிய வீடு நிர்மாணிக்கும் திட்டத்தை முன்னெடுத்தது.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 21 வது படைப்பிரிவின் கீழுள்ள 3 வது இலங்கை கவச வாகன படையணி சிப்பாய்களிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த நிர்மாணப் பணிகள், ‘இராணுவ வழி முன்னோக்கு வியூகம் 2020-2025’க்கு இணங்க குறுகிய காலத்திற்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்திட்டமானது கவச வாகன பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனில் பீரிஸ் அவர்களின் மேற்பார்வையில் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டது. இவர் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையத்தில் சேவையாற்றும் பொழுது பல வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

3 வது இலங்கை கவச வாகன படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டி.எச்.எம்.டி.ஆர்.எம். பீரிஸ் அவர்கள் சில வாரங்களுக்குள், வரையரையறுக்கப்பட்ட சைன்டர் டெக்னாலஜிஸ் தனியார் நிறுவனம் வழங்கிய மூலப்பொருட்களைக் கொண்டு முழுமையான கட்டுமான பணிகளை முன்னெடுத்தார்.

வெள்ளிக்கிழமை (25), மத சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 21 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க, கவச வாகன பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனில் பீரிஸ், 3 வது இலங்கை கவச வாகன படையணியின் கட்டளை அதிகாரி, சிவில் விவகார அதிகாரி, பல சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் விருந்தினர்கள் முன்னிலையில் வீடு உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.