Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th June 2020 14:00:10 Hours

இராணுவத்தினரின் வீடு கட்டுவதற்காக வழங்கப்படும் சலுகைகள்

பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தல்களின் பிரகாரம், இராணுவ நலன்புரி பணிப்பகத்தினால் இராணுவத்தில் சேவையாற்றும் அனைத்து படையினருக்குமான புதிய வீடுகளை நிர்மானிக்க தேவையான மூலப் பொருட்களுக்களை கொள்வனவு செய்வதற்கான விலை தள்ளுபடிகள் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, “வரையறுக்கப்பட்ட சியம் சிட்டி (லங்கா) நிறுவனத்தில் இருந்து சன்ஸ்தா” சீமெந்து (14.42%), வரையறுக்கப்பட்ட ரைனோ கூரை தயாரிப்புகள் நிறுவனத்தில் இருந்து கன்னார்கள் (17%), * ஆரஞ்சு எலக்ட்ரிக் நிறுவனத்திடமிருந்து சுவிட்சுகள், கேபிள்கள், சொக்கெட்டுகள், மின்குமிழ்கள் உள்ளிட்ட மின்சார பாகங்கள் ( 15 - 20%) மற்றும் * கூரை தகடுகள், பாட்சிசன்பொருட்கள், ஆமர் கூரை தகடுகள், (8 - 16%) வீகிதத்தில் இராணுவத் தலைமையகத்தின் பிரிகேடியர் டிக்கிரி திசாநாயக்க தலைமையிலான இராணுவ நலன்புரி பணிப்பகத்தினால் செயல்படுத்திய திட்டத்தின் மூலம் படையினருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பனாகொட, அனுராதபுரம், பல்லேகலே, மின்னேரியா, பூசா, அம்பாறை, தியதலா மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் உள்ள நலன்புரி வியாபார ஒருங்கிணைப்பாளர் ஆகியோருடன் அருகிலுள்ள இராணுவ நலன்புரி வியாபார நிலையங்களுடன் ஒருங்கிணைந்து இந்த மானிய விலையில் மூலப்பொருட்களை வாங்குவதற்கு இராணுவ வீரர்கள் தொடர்பு கொள்ள முடியும்.

Contact No : 0114051237 jordan Sneakers | Nike React Element 87