Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th July 2018 14:00:09 Hours

இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் பாடசாலை சுற்று வேலிகள் அமைப்பு

கிளிநொச்சியில் உள்ள பனங்கடி அரச கலவன் பாடசாலையின் அதிபர் அவர்களினால் 571 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் நஜூவ எதிரிசிங்க அவருக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய படையினரால் இந்த பாடசாலை மைதான சுற்று வேலிகள் அமைத்து கொடுக்கப்பட்டன.

57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களின் எண்ணக் கருவிற்கமைய கனடா பேஸ்ட் யூத் அவுட்ரீச் அமைப்பின் ஒரு இலட்சம் ரூபாய் அனுசரனையில் இராணுவத்தினரால் இந்த வேலிகள் அமைக்கும் பணிகள் இடம்பெற்றன.

இந்த வேலி அமைக்கும் பணிகளுக்கு 16 (தொ) ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் 40 படை வீரர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றன.

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இராணுவத்தினரால் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இராணுவத்தின் இந்த பணிகளை அதிபர், ஆசிரியர்கள் பாராட்டினார்கள் buy footwear | nike