Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th July 2021 18:45:43 Hours

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கர்பிணி தாய்மார்களுக்கு உலர் நிவாரண பொதிகள் விநியோகம்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் “குண ஜய மன்றம்” என்ற நிறுவனத்தினால் வழங்கப்பட்ட 50 உலர் நிவாரண பொதிகள் வெள்ளிக்கிழமை (9) ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள கர்பிணி தாய்மார்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

கிராம உத்தியோகத்தர்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய அவர்கள் சிரேஸ்ட அதிகாரிகளுடன் இணைந்து நிவாரண பொதிகளை வீடுகளுக்கே சென்று விநியோக்கும் பணிகளை மேற்கொண்டார்.

இந்நிகழ்வினை 64 வது படைப்பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் உபுல் பிரேமரத்ன மற்றும் அப்படைப்பிரிவின் ஏனைய அதிகாரிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

நாட்டில் நிலவும் கொவிட் - 19 தொற்றுநோய் பரவல் காலத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்திற் கொண்டு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய அவர்களினால் வழங்கப்பட்ட ஆலோசணைக்கமைய இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குண ஜய மன்றத்தின் நன்கொடையாளர்கள் சார்பில் திரு சஞ்சீவ மலலசேகர விநியோக திட்டத்தில் பங்கேற்றார்.