30th March 2019 14:38:55 Hours
7 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாகவும் கிளிநொச்சி பரவிபஞ்சன்விளையாட்டு மைதானத்தில் 35 காலபந்தாட்ட கழகங்களின் பங்குபற்றுதலுடன் கடந்த வியாழக்கிழமை (28) ஆம் திகதி முன்னாள் 57 ஆவது படைப்பிரிவின் படைத்தளபதியும் தற்போதய கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களின் வழிகாட்டுதலினூடாக இடம்பெற்றது.
மேலும், இப்போட்டியின் ஆரம்ப நிகழ்வானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியினால் ஆரம்பிக்கப்பட்டதோடு, ஏதிர் வரும் 31 ஆம் திகதி வரை நடாத்தப்படவுள்ள இன்நிகழ்வின் இறுதிக் கட்டப் போட்டியானது 2019 ஏப்ரல் 06 ஆம் திகதி நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டியின் நோக்கமானது கிளிநொச்சி இளைஞர்களின் விளையாட்டுத் துறை, கால்பந்தாட்ட ஆர்வமுடையோர்கள், மற்றும் சமாதான நல்லிணக்கத்திற்கான சிவில் சமூக இராணுவ ஒத்துழைப்பை ஊக்குவித்தலாகும்.
முன்னாள் மஹாதேவ அஷ்ரமயவின் பொறுப்பாளர் காலஞ்சென்ற திரு. ராஜநாயகம் அவர்களின் நினைவாக சிரிலங்கா மொபிடல் அணுசரனையுன் நடாத்தப்பட்டஇப்போட்டிக்கானதங்களது விண்ணப்பங்களைஆர்வமுள்ள 35 கால்பந்தாட்ட கழகங்கள் அனுப்பி போட்டியில் கலந்துகொண்டனர்
571 ஆவது படைத் தளபதி கேணல் நஜீவ எதிரிசிங்க, மஹாதேவ அஷ்ரமய தலைவர் திரு. பொண்ணம்பலம் நித்தியநாதன், சிரிலங்கா மொபிடல் நிறுவன திரு. சுகத் அபேசிங்க உள்ளிட்ட பலர் இப்போட்டியின் ஆரம்ப நிகழ்வின்போது கலந்துகொண்டனர் spy offers | Air Jordan Release Dates Calendar