12th April 2021 21:32:45 Hours
அண்மையில் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவுடன் கிராம மக்கள் நடத்திய சந்திப்பின் விளைவாக யாழ் நவற்குழி கிராமத்தின் சிறார்களுக்கு மிகவும் தேவையாக காணப்பட்ட முன்பள்ளி கட்டிடம் வழங்கப்பட உள்ளது.
வெள்ளிக்கிழமை (9), 52வது படைப்பிரிவின் 523 வது பிரிகேட்டின் படையினரின் மூலப் பொருட்களுக்கான செலவுடன் நிர்மாணிக்கப்படவுள்ள இப்புதிய கட்டிடத்தின் அடிக்கல்லினை யாழ்ப்பாணம் தளபதி ஒரு குழந்தையுடன் இணைந்து நாட்டி வைத்தார்.
தொடக்க விழாவில் சில சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் கிராமமக்கள் கலந்து கொண்டனர். Nike shoes | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger