Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd March 2019 22:45:02 Hours

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஆங்கில பயிற்சி நிறைவு விழா

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஆங்கில சான்றிதழ் பயிற்சிநெறி நிறைவு விழா இம் மாதம் (19) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த பயிற்சி நெறிகள் 2019 ஆம் ஆண்டு பெப்ரவாரி மாதம் 13 ஆம் திகதி 19 இராணுவஅதிகாரிகளுடன் ஆரம்பமாகி இம் மாதம் (19) ஆம் திகதி நிறைவடைந்துள்ளது.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் இந்த பயிற்சி நெறிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பயிற்சிகளை சிறந்த முறையில் மேற்கொண்டு 2 ஆவது பொறிமுறை காலாட் படையணியைச் சேர்ந்த கெப்டன் டீ.எம். எல்.எம் பண்டார முதலாவு இடத்தையும், 7 ஆவது விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த இரண்டாம் லெப்டினன்ட் கே.வி.ஆர்.டி கடுவாகல இரண்டாவது இடத்தையும், 5 (தொண்டர்) சிங்கப் படையணியைச் சேர்ந்த இரண்டாம் லெப்டினன்ட் எச்.எம்.கே.எஸ் பண்டார அவர்கள் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளார்.

இந்த பயிற்சி நிறைவு விழாவிற்கு பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேர்ணல் பதவி நிலை அதிகாரியாகவுள்ள கேர்ணல் அணில் பீரிஸ் அவர்கள் வருகை தந்து பயிற்சியை நிறைவு செய்த இராணுவ அதிகாரிகளுக்கு சான்றிதழை வழங்கி கௌரவித்தார். Sports News | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov