11th February 2020 16:50:49 Hours
பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது எண்ணக்கருவிற்கமைய ‘துரு மிதுரு – நவ ரடக்’ எனும் தொனிப் பொருள்களின் கீழ் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரனையுடன் 682 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டுடன் புதுக்குடியிருப்பு வர்னவில் பிரதேசத்தில் இம் மாதம் (8) ஆம் திகதி பொதுமக்களுக்கு 200 தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த தென்னங்கன்றுகள் விநியோகிக்கும் நிகழ்வானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 682 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் எஸ் கஸ்தூரிமுதலி அவர்களது தலைமையில் 4 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் S.M.P பண்டார அவர்களது பூரன ஏற்பாட்டுடன் இடம்பெற்றன.
682 ஆவது படைத் தலைமையகத்தின் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டனர். Running sport media | Gifts for Runners