Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th July 2018 22:28:50 Hours

இராணுவத்தினரால் பார்வை பெற கண் நோயாளிகளுக்கு உதவிகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் லயன்ஸ் கழகத்தின் அனுசரனையில் யாழ் பிரதேசத்தில் உள்ள கண்நோயாளர்களுக்கு பார்வை பெறுவதற்கான சிகிச்சைகள் (10) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றன.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது அறிவுறுத்தலுக்கமைய இராணுவ அதிகாரிகள், படையினர்கள் யாழ் போதனை வைத்தியசாலையில் பணி புரியும் வைத்திய அதிகாரிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றன.

இந்த கண் கிளினிக்கிற்கு அப் பிரதேசத்தைச் சேர்ந்த 159 பேர் வருகை தந்தனர் . முதல் கட்டத்தில் அவர்களில் சந்திர சிகிச்சைக்காக 20 பேர் லயன்ஸ் கழகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நோயாளர்கள் இந்த சிகிச்சைக்கு வருவதற்காக போக்குவரத்து, உலர் உணவு வசதிகள் இராணுவத்தினரால் வழங்கப்பட்டன.

bridgemedia | Sneakers