Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th December 2019 22:10:38 Hours

இராணுவத்தினரால் நாடாளவியல் ரீதியாக கடற்கரை பிரதேசம் மாசடைவதை தடுக்கும் பணிகள்

கடற்கரை பிரதேசம் மாசடைவதை தடுக்கும் முகமாக இராணுவத்தினரால் கடற்கரை பிரதேசத்தை துப்பரவு செய்யும் பணிகள் நாடாளவியல் ரீதியாக ஆரம்பிக்கப்பட்டன. இதில் முதல் அங்கமாக மோதரை காக்கை தீவு கடற்கரை பகுதிகளில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது பங்களிப்புடன் இம் மாதம் (29) ஆம் திகதி சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. (இந்த செய்தியானது இராணுவ இணையதள முதல் பக்கத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.)

யாழ் குடா நாட்டில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் இராணுவ அதிகாரிகள் 40 பேரதும், 1035 படையினரது பங்களிப்புடன் பண்ணையிலிருந்து சுன்டிகுளம் வரையான கடலோர பகுதிகளில் இம் மாதம் (29) ஆம் திகதி துப்பரவு பணிகள் படையினரால் மேற்கொள்ளப்பட்டன.

இந்த துப்பரவு பணிகள் 51, 52 மற்றும் 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதிகளின் தலைமையில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றன.

மேலும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 700 இராணுவ அங்கத்தவரது பங்களிப்புடன் முல்லைத்தீவு கடலோர பகுதிகளில் 59, 68 மற்றும் 64 ஆவது படைப் பிரிவின் படையினரது பங்களிப்புடன் துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் கொக்கிலாய் கடலோர பகுதிகளில் 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் W.L.P.W பெரேரா அவர்களது தலைமையில் கட்டளை தளபதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் படையினரது பங்களிப்புடன் இந்த சிரமதான பணிகள் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்களது வழிக்காட்டலின் கீழ் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 54 மற்றும் 62 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் மற்றும் புல்மோட்டை கடலோர பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் (29) ஆம் திகதி கடலோர பகுதிகள் மாசடைவதை தடுக்கும் பணித்திட்டத்தின் கீழ் கடலோர துப்பரவு சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் D.S.D வெலிகல அவர்களது தலைமையில் மன்னார் பிரதேசங்களில் 541, 543 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 12 (தொ) பீரங்கிப் படையணி, 10 (தொ) கெமுனு காலாட் படையணி, 15 கெமுனு காலாட் படையணி, 7 விஜயபாகு காலாட் படையணி, 5 (தொ) கஜபா படையணி, 24 ஆவது இலேசாயுத காலாட் படையணி, 2 பொறிமுறை காலாட் படையணி, 5 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பங்களிப்புடன் முந்தன் பிட்டியிலிருந்து வங்காலை வரையிலான கடலோர பகுதிகள், கயாகுலியிலிருந்து சிலாவத்துரை மற்றும் மன்னார் கடலோர பகுதிகளில் துப்பரவு சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் J.M.U.D ஜயசிங்க அவர்களது பணிப்புரைக்கமைய புல்மோட்டை கடலோரப் பகுதிகளிலுள்ள 15 கிலோ மீற்றர் தூரம் வரையான கடலோரப் பகுதிகளில் 1000 படையினரது பங்களிப்புடன் துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே அவர்களது வழிக்காட்டலின் கீழ் 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் A.L.P.S திலகரத்ன அவர்களது தலைமையில் 122 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டில் 22 அதிகாரிகள் மற்றும் 263 படை வீரர்களது பங்களிப்புடன் ஹம்பாந்தோட்டை கடலோர பகுதிகளில் 9 ஆவது சிங்கப் படையணி, 18 ஆவது கெமுனு காலாட் படையணி, 23 ஆவது கஜபா படையணி, 3 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரின் பங்களிப்புடன் துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஷிக பெர்ணாண்டோ அவர்களது வழிக்காட்டலின் கீழ் கிண்ணியா, சம்பூர், திருகோணமலை உவர்மலை, மூதூர், உப்புரால் வெருகல் கடலோர பகுதிகளில் 22 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் துப்பரவு பணிகள் கடந்த டிசம்பர் மாதம் (29) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.

23, 24 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் வாகரை, காயன்கேனி, கல்குடா, சாலைதீவு, அருகாம்பையிலிருந்து கல்முனை வரையான கடலோர பகுதிகளில் 60 கிலோ மீற்றர் தூரம் வரையான பகுதிகளில் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் அம்பாறை போர் பயிற்சி பாடசாலை படையினரது பங்களிப்புடன் சந்தும்புர பகுதிகளில் துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 142 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கொகுவலை, கல்கிஸ்ஸ, வெள்ளவத்தை பிரதேசங்களில் துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

143 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் தம்மிக திசாநாயக அவர்களது தலைமையில் வென்னப்புவ பிரதேசங்களில் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 16 கஜபா படையணி, 1 ஆவது தேசிய பாதுகாப்பு படையணி , இராணுவ பயிலிலவல் பயிற்சி நிலையம் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் 141 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் நீர்கொழும்பு கபுன்ஹொட, தலஹேன தேவாலய கடலோர பகுதிகளில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. Sports Shoes | Sneakers