24th August 2023 22:13:22 Hours
கொஸ்கெலே, ஓபாத வறக்காபொல பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட் 22) ஏற்பட்ட தீ 61 வது காலாட் படைப்பிரிவின் 611 வது காலாட் பிரிகேட்டின் 8 வது இலங்கை சிங்கப் படையணியின் 60 படையினரால் விரைவாகச் செயற்பட்டு கட்டுபாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளின் ஆதரவுடனும் பொலிஸாரின் உதவியுடனும் படையினரால் காட்டுத் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
புதன்கிழமை (ஓகஸ்ட் 23) காலை கல்தொல பிரதேச வனப்பகுதியில் வேகமாக பரவிய தீயை அணைக்க கல்தோட்டை பிரதேச செயலகம் மற்றும் இரத்தினபுரி அனர்த்த முகாமைத்துவ நிலையம் இராணுவத்தின் உதவியை நாடின.
அதற்கமைய 61 வது காலாட் படைப்பிரிவின் 611 வது காலாட் பிரிகேடின் நான்கு அதிகாரிகள் உட்பட 8 வது கெமுனு ஹேவா படையணியின் 60 படையினர்கள் விரைவாக தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர்.
நிலவும் காலநிலை காரணமாக ஏற்பட்ட காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இராணுவத்தினர் சரியான நேரத்தில் பங்களிப்பு செய்தனர்.
61 வது காலாட் படைப்பிரிவு தளபதி, 611வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் கட்டளை அதிகாரிகள் படையினர்களுடன் நெருக்கமாக ஒருங்கிணைத்து தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினர்.