Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th June 2019 12:49:36 Hours

இராணுவத்தினரால் கிளிநொச்சி பொது மக்களை மகிழ்விக்கும் நிகழ்வுகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57, 65 மற்றும் 66 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் தர்மபுரம் மைதானம் , மல்லாவி மத்திய கல்லூரி மற்றும் பூநகிரி கோட்டை வளாகத்தினுள் கிளிநொச்சி பொதுமக்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சிகள் இம் மாதம் (22) ஆம் திகதி இடம்பெற்றது.

இராணுவத்தில் பயற்சியளிக்கப்பட்ட K-9 நாய்களின் சாகச கண்காட்சிகள், இன்னிசை நிகழ்ச்சி, அணிவகுப்பு மற்றும் பேன்ட் கண்காட்சிகள் இந்த நிகழ்வினூடாக இடம்பெற்றது.

தர்மபுரம் மத்திய கல்லூரியில் இராணுவ கொமாண்டோ படையணியின் K-9 நாய்களின் சாகச கண்காட்சிகளும், இராணுவ பொறியியல் படையணியின் பேன்ட் வாத்திய அணிவகுப்பு கண்காட்சிகளும் இடம்பெற்றது.

மேலும் 6 ஆவது சிங்கப் படையணியின் இன்னிசை நிகழ்ச்சிகள் 600 க்கு மேலான பார்வையாளர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது.

இந்த நிகழ்வுகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது எண்ணக்கருவிற்கமைய 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஏ எஸ் ஹேவாவிதாரன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 572 படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் டீ எம் பி பி தசநாயக அவர்களது தலைமையில் 6 ஆவது சிங்கப் படையணி, 14 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் பூரன ஏற்பாட்டுடன் இடம்பெற்றது.

மேலும் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களது வழிக்காட்டலின் கீழ் 653 ஆவது படைத் தலைமையகத்தின் கீழுள்ள 10, 17 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் பூரன ஏற்பாட்டுடன் மல்லாவி மத்திய கல்லூரி மைதானத்தில் கொமாண்டோ படையணியின் இராணுவ சகாச கண்காட்சி நிகழ்வுகள் 1500 பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்களது பங்களிப்புடன் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

66 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் பூநகிரி கோட்டை வளாகத்தினுள் இன்னிசை நிகழ்ச்சிகள் இம் மாதம் (21) ஆம் திகதி மாலை இடம்பெற்றது.

இந்த இன்னிசை நிகழ்ச்சியில் 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் எம் டீ விஜயசுந்தர மற்றும் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்கள் இணைந்து கொண்டனர்.

மேலும் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களது வழிக்காட்டலின் கீழ் 653 ஆவது படைத் தலைமையகத்தின் கீழுள்ள 10, 17 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் பூரன ஏற்பாட்டுடன் மல்லாவி மத்திய கல்லூரி மைதானத்தில் கொமாண்டோ படையணியின் இராணுவ சகாச கண்காட்சி நிகழ்வுகள் 1500 பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்களது பங்களிப்புடன் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running Sneakers | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp